32.1 C
Chennai
Sunday, Oct 13, 2024
suddu1
Other News

மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவர் : மாரடைப்பால் மரணம்!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்வா பகுதியில் திலீப் சால்வி வசித்து வருகிறார். அவருக்கு வயது 56, இவரது மனைவி பிரமிளாவுக்கு 51 வயது. திலீப் சால்வே தானே மாவட்ட முன்னாள் மேயர் கணேஷ் சால்வேவின் தம்பி ஆவார்.

நேற்று இரவு 10 மணியளவில் திலீப் சால்வே வீடு திரும்பினார். பின்னர் திலீப்புக்கும், அவரது மனைவி பிரமிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய திலீப் தனது மனைவி பிரமிளாவை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டார்.

இதில், சம்பவ இடத்திலேயே பிரமிளா மயங்கி விழுந்தார். மனைவியை சுட்டுக் கொன்ற சில நிமிடங்களில் திலீப்புக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால், திலீப்பும் நிலைகுலைந்து விழுந்தார், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவரது மகன், ரத்த வெள்ளத்தில் தாயும், தந்தையும் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திலீப் மாரடைப்பால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மனைவியை சுட்டுக்கொன்ற கணவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதுடன் சம்பவத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

செந்தில் ரொம்ப நல்லவர், ஆனால் கவுண்டமணி!!

nathan

ரூ.70 லட்சம் வரை செலவு செய்யும் கோடீஸ்வரி பெண்!

nathan

லியோ டிக்கெட்? அதிரடி காட்டிய அமுதா ஐஏஎஸ்!

nathan

இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப பொறாமைக்காரர்களாம்…

nathan

நடிகை பாவனியின் முதல் கணவர் இவர் தான்!!

nathan

நடிகர் புகழ் மகளுக்கு சூட்டி இருக்கும் பெயர்..

nathan

கிளாமர் லுக்கில் அசத்தும் நடிகை அதிதி ஷங்கர்..புகைப்படம்

nathan

மாட்டுப்பண்ணை வைத்து நடத்தி வரும் நடிகை கீர்த்தி பாண்டியன்

nathan

இலங்கையில் அடுத்தடுத்து வெடித்துச் சிதறும் சிலிண்டர்கள்! வெளிவந்த தகவல் !

nathan