27.4 C
Chennai
Saturday, Oct 12, 2024
22 62663d
ஆரோக்கிய உணவு

தினமும் முட்டைகோஸ் சாப்பிடலாமா? யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?தெரிந்துகொள்வோமா?

முட்டை கோஸ் கீரை வகையை சேர்ந்த ஒரு உணவாகும்.

இதில் வைட்டமின் ஏ, உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள், பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான சி மற்றும் கே போன்றவை அதிகமாக உள்ளது.

சுலபமாக தேங்காய் பால் ஆப்பம் செய்யலாம் வாங்க…. அட இவ்வளவு ஈசியா?

முட்டைகோஸ் யாரெல்லாம் சாப்பிடலாம், அதனைச் சாப்பிடுவதால் ஏற்படுகிற நன்மைகள் என்னென்ன போன்றவை குறித்து பார்க்கலாம்.

 

நன்மைகள்
எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.
புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்கள் முட்டைகோஸில் நிறைய உள்ளன. புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முட்டைகோஸ் முற்றிலும் தடுக்கும்.
அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம்.
ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.
உடலில் அழற்சி அல்லது உட்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைகோஸை சாப்பிட்டால், அதில் உள்ள அமினோ ஆசிட் குளுட்டமைன், அவைகளை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.
இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.
முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது. தற்போது மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் சிவப்பு நிற முட்டைகோஸ் சாப்பிட்டால், அல்சைமர் நோயை தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள வைட்டமின் கே மற்றும் ஆந்தோசையனின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், மூளையில் ஏற்படும் பிளேக்கை குறைக்கும்.
முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.

முட்டைகோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசைகளில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து சிறந்த நிவாரணம் தரும்.
காலை எழுந்தவுடன் இந்த நீரை பருகினால் சர்க்கரை நோய் கிட்டயே வராதாம்

 

தலைமுடி வளர்ச்சியை தூண்டும்
ஆம், முட்டைகோஸ் வேக வைத்த தண்ணீரில் உங்கள் கூந்தலை அலசுவதால் அது தலைமுடிக்கு நன்மைகளை கொடுக்கிறது.

முட்டைகோஸ் தண்ணீரில் சல்ஃபர் இருக்கும். இது தலைமுடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

 

அதோடு இதில் பொட்டாசியம், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் இ இருக்கிறது இவை உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது.

மாசு மருவற்ற பொலிவான சருமம் கிடைக்க தொடர்ந்து முட்டைகோஸ் தண்ணீரை பயன்படுத்தலாம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா தொப்பையை குறைக்க உதவும் 15 உணவுகள்

nathan

காரட் ஜூஸ் இவ்வளவு நன்மைகளா?

nathan

‘இத’ சாப்பிட்டா உங்களுக்கு கொலஸ்ட்ரால் & இதய நோய் ஏற்படாமல் இருக்குமாம் தெரியுமா?

nathan

இந்தப் பழம் பல நோய்களில் இருந்து விடுதலை அளிக்கும்…..

sangika

அல்சரை குணமாக்கும் பீட்ரூட்

nathan

சூப்பரான மாங்காய் சிக்கன் குழம்பு

nathan

உங்களுக்கு தெரியுமா தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா..?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் பருவதற்கு ஏற்ற சில ஆரோக்கிய பானங்கள்!!!

nathan

ரமலான் நோன்பு இருக்கும் போது ஏன் பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டுமென்று தெரியுமா?

nathan