35.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
201703220902088599 sukku malli kuzhambu dry ginger coriander seeds kulambu SECVPF
சைவம்

ஜீரண சக்தியை தூண்டும் சுக்கு மல்லி குழம்பு

வயிற்று கோளாறு, அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த சுக்கு மல்லி குழம்பை வாரம் இருமுறை செய்து சாப்பிடலாம். இப்போது இதன் செய்முறையை பார்க்கலாம்.

ஜீரண சக்தியை தூண்டும் சுக்கு மல்லி குழம்பு
தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் – 150 கிராம்,
பூண்டு பற்கள் – 10,
புளி – எலுமிச்சை அளவு,
கடலைப்பருப்பு – 4 டீஸ்பூன்,
வெந்தயம், மிளகு, கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்,
சுக்கு மல்லி பொடி – ஒன்றரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – தேவையான அளவு,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
நல்லெண்ணெய் – 3 குழிக்கரண்டி,
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.

* புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து 1 ஸபூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப்பருப்பு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை போட்டு நன்றாக வறுத்து ஆறியதும், மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

* புளியை ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

* மீதமுள்ள நல்லெண்ணெயை கடாயில் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

* இரண்டும் நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, புளித்தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

* இப்போத பொடித்து வைத்த பொடியையும், சுக்கு மல்லி பொடியை, உப்பு சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

* குழம்பு பக்குவம் வந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

* சூப்பரான சுக்கு மல்லி குழம்பு ரெடி.

* இந்த சுக்கு மல்லி குழம்பு ஜீரண சக்தியை நன்கு தூண்டக் கூடியது.201703220902088599 sukku malli kuzhambu dry ginger coriander seeds kulambu SECVPF

Related posts

சேனைக்கிழங்கு பொடிமாஸ்

nathan

காலிப்ளவர் பொரியல்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான பலாப்பழ வறுவல்

nathan

சிம்பிளான… மோர் குழம்பு

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் சிப்ஸ்

nathan

பன்னீர் ராஜ்மா மசாலா

nathan

ஈஸி லன்ச் :(10 நிமிடத்தில் செய்து விடலாம் )

nathan

சோயா மட்டர் புலாவ்|soya matar pulao recipe in tamil

nathan

ஜுரா ஆலு

nathan