28.2 C
Chennai
Sunday, Jul 20, 2025
chettinadbeanscau
அழகு குறிப்புகள்

செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர்

தேவையான பொருட்கள்:

* காலிஃப்ளவர் – 1

* பச்சை பீன்ஸ் – 200 கிராம் (பொடியாக நறுக்கியது)

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் காய்கறிகளை சரியான அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் காலிஃப்ளவர் மற்றும் பீன்ஸ் இரண்டையும், கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து மென்மையாக வேகும் வரை வேக வைத்து இறக்கிக் கொண்டு, நீரை வடிகட்டிவிட வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* அடுத்து அதில் கறிவேப்பிலை, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் வேக வைத்துள்ள காய்கறிகளையும் சேர்த்து, உப்பு தூவி நன்கு பிரட்டி விட வேண்டும்.

* காய்கறிகளானது மசாலாவுடன் நன்கு ஒன்று சேர்ந்ததும், ஒரு 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கினால், சுவையான செட்டிநாடு காலிஃப்ளவர் பீன்ஸ் பொரியல் தயார்.

Related posts

பருவால் உண்டான வடு மறைய ஃபேஸ் பேக்

nathan

வரலக்ஷ்மியுடன் சேர்ந்து கொண்டு நீச்சல் குளத்தில் செம்ம அலப்பறை !வீடியோ

nathan

பப்பாளி சருமத்தை பளபளப்பாக

nathan

துளசி பேஸ் பேக்கின் நன்மைகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் முருங்கைக்கீரை சூப்

nathan

உங்கள் முகம் தேவதை போல ஜொலிக்க இத படிங்க!

sangika

பெண்களே! புகுந்த வீட்டில் அனைவரையும் உங்கள் கைகளுக்குள் வைத்திருக்க வேண்டுமா? இதோ சில வழிகள்!

sangika

இதை செய்யுங்கள்! தினமும் இரவில் தூங்கும் முன் பேஸ்பேக் முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி வர முகம் வெண்மையாகும்.

nathan

ரசிகரிடம் மனம் திறந்த அனிதா! நான் வெளியேறியதற்கு இதுதான் உண்மையான காரணம்!

nathan