29.4 C
Chennai
Saturday, Oct 5, 2024
625.0.560.350.160.300. 1

சூப்பர் டிப்ஸ்! வாயு தொல்லையை நீக்கும் வெற்றிலை திப்பிலி சூப் செய்வது எப்படி?

அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படும் உணவுப்பாதைப் பிரச்சினையே வாயுத் தொல்லை’(Flatulence) எனப்படும்.

இது வயிற்றில் மட்டுமே ஏற்படக்கூடிய பிரச்சினை ஆகும்.

நாம் அவசரமாகச் சாப்பிடும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும்போது, காபி, டீ மற்றும் புட்டிப்பானங்களை உறிஞ்சிக் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே காற்றையும் சேர்த்து விழுங்கிவிடுகிறோம்.625.0.560.350.160.300. 1

இந்தக் காற்றில் 80 சதவீதம் இரைப்பையில் இருந்து ஏப்பமாக வெளியேறிவிடுகிறது. மீதி குடலுக்குச் சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.

இது பிறருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது. அந்தவகையில் இதிலிருந்து விடுபட கூடிய தற்போது அற்புத சூப் ஒன்றை எப்படி தயாரிக்கலாம் என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
வெற்றிலை – 6,
மிளகு பொடி – 1/2 டீஸ்பூன்
திப்பிலி – 2 டீஸ்பூன்,
பூண்டு – 10 பல்
பெருங்காயப்பொடி, உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, சூடானதும் நசுக்கிய பூண்டு, திப்பிலி, பெருங்காயப்பொடி, வெற்றிலை, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

வெற்றிலை நன்கு வெந்ததும், சூப்பை வடிகட்டி மிளகுத்தூள் சேர்த்து அருந்தலாம்.

டான்சில்ஸ், வீக்கம் போன்ற நோயால் பாதிக்கப்படுவோர் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.