16 sweet corn soup
சூப் வகைகள்

சுவையான ஸ்வீட் கார்ன் சூப்

தற்போது மார்கெட்டில் சோளம் விலை மலிவில் கிடைப்பதால், அதனை வாங்கி வந்து, அதிலும் இளசாக இருக்கும் சோளத்தை வாங்கி வந்து, அவற்றை சூப் போன்று செய்து குழந்தைகளுக்கு மாலை வேளையில் கொத்தால், அவர்கள் வயிறு நிறைவதோடு, ஆரோக்கியமானதும் கூட.

எனவே இங்கு ஸ்வீட் கார்ன் சூப்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சி செய்து பாருங்கள்.

Sweet Corn Soup Recipe
தேவையான பொருட்கள்:

அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் – 1/2 கப்
பால் – 1/2 கப்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப்
சோள மாவு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் சோளத்தை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, மென்மையாக வேக 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்னர் அந்த சோள மணிகளை உதிர்த்து, அதனை மிக்ஸியில் போட்டு, 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அந்த அரைத்த சோள கலவையை ஊற்றி, 3 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின் அதில் மீண்டும் 1/4 கப் தண்ணீரில் சோள மாவை கலந்து ஊற்றி, பின் பால் சேர்த்து, 2 நிமிடம் சூப் கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, அதில் மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாறினால், ஸ்வீட் கார்ன் சூப் ரெடி!!!

Related posts

பேபிகார்ன் மஷ்ரூம் செலரி சூப்

nathan

ராஜ்மா சூப்

nathan

கேரட், சோயா சூப்

nathan

தீபாவளிக்கான ஒரு வித்தியாசமான வறுத்த குடைமிளகாய் சூப்

nathan

மருத்துவ குணம் நிறைந்த புதினா சூப்

nathan

முருங்கைக்காய் சூப்

nathan

வயிற்று உபாதைகளுக்கு தீர்வு தரும் பூண்டு சூப்

nathan

இறால் சூப்

nathan

தாய்லாந்து கோகனட் சூப்

nathan