29.4 C
Chennai
Saturday, Oct 5, 2024
201609200836226821 How to make delicious kulai puttu SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான பச்சரிசி குழாப்புட்டு செய்வது எப்படி

சுவையான பச்சரிசி குழாப்புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். டயட்டில் இருப்பவர்கள் காலை வேளைகளில் அவித்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

சுவையான பச்சரிசி குழாப்புட்டு செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

பச்சரிசி மாவு – ஒரு கப்,
தேங்காய் துருவல் – அரை கப்,
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,
நெய் – சிறிதளவு,
முந்திரி – 8,
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

* பச்சரிசி மாவை வெறும் வாணலியில் நன்கு வறுக்கவும்.

* தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

* வறுத்த பச்சரிசி மாவில் உப்பு கரைத்த நீர் தெளித்துப் பிசிறி, 10 நிமிடம் அப்படியே வைக்கவும்.

* புட்டுக்குழாயில் கொஞ்சம் புட்டு மாவை அடைத்து, அதன் மேல் ஒரு அடுக்காக தேவையான அளவு தேங்காய் துருவல் கலவையை அடைத்து… மற்றொரு அடுக்காக மாவு வைத்து, பிறகு மீண்டும் தேங்காய் துருவல் கலவையை வைத்து அடைக்கவும்.

* இதை ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

* பிறகு, குழாயிலிருந்து புட்டு எடுத்து… நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

* இதற்கு தொட்டு கொள்ள கொண்டைகடலை குருமா சுவையாக இருக்கும்.How to make delicious kulai puttu

Related posts

ரமழான் ஸ்பேஷல்: நோன்பு கஞ்சி செய்முறை…

nathan

மாலை நேர சிற்றுண்டி மசாலா இடியாப்பம்

nathan

சாமை சிறுபருப்பு  முள்ளு முறுக்கு

nathan

சுவையான சத்தான முடக்கத்தான் கீரை அடை

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரெட் பஜ்ஜி

nathan

சுவையான திணை அரிசி காய்கறி உப்புமா செய்வது எவ்வாறு….

nathan

கேரளா ஸ்பெஷல் உண்ணியப்பம்

nathan

இட்லி

nathan

ஜவ்வரிசி தோசை

nathan