35.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
03 17
மருத்துவ குறிப்பு

சளித்தொல்லையில் இருந்து விடுபட அருமையான வைத்தியம்!

பருவநிலை அடிக்கடி மாறி வருவதால் பலரும் சளித்தொல்லையினால் அவதிப்பட்டு வருவார்கள். சளி தொல்லை சிறியதாக இருந்தாலும் நமக்கு ஒருவித அசௌகரியத்தை தருகிறது. சளி பிடித்தால் உடனே தொண்டை வலி, தலைவலி ஆகியவை சேர்ந்தே வரும். இத்தகைய சளித்தொல்லையிலிருந்து எப்படி விடுபடுவது என்பது பற்றி பார்ப்போம்.

சூடான இஞ்சி டீ
சளி பிடித்து இருக்கும் போது சற்று சூடான பானங்களை குடித்தால், நன்றாக இருக்கும். இஞ்சி சளித்தொல்லையை நீக்க வல்லது.

தேவையான பொருட்கள்:
6-8 டேபிள் ஸ்பூன் புதிதாக துருவப்பட்ட இஞ்சி
சிறிதளவு இலவங்கப்பட்டை (தேவைப்பட்டால்)
எலுமிச்சை சாறு சிறிதளவு (தேவைப்பட்டால்)
தேன் சிறிதளவு (தேவைப்பட்டால்)
4 கப் சுடு தண்ணீர்
இந்த பொருட்களை சுடுதண்ணீரில் கலந்து 10 நிமிடங்கள் கழித்து குடிக்கலாம். தேவைப்படும் போது சூடு செய்து தினமும் மூன்று முறை பருக வேண்டும்.

மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு
தலையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது. மஞ்சளையும், வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். இதில் தேவைக்கு தகுந்தது போல நீர் சேர்த்துக்கொள்ளலாம்.
இதனை நெற்றியிலும் மூக்கிலும் தடவ வேண்டும். சுண்ணாம்பு சேர்ப்பதால் புண்ணாகிவிடுமோ என்ற கவலை வேண்டாம். மஞ்சள் புண்ணாவதை தடுக்கும். இதனை தடவிய பின் நன்றாக தூங்கி ஓய்வெடுக்க வேண்டும்.

நெஞ்சு சளி நீங்க
நெஞ்சு சளி நீங்க தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவினால் நெஞ்சு சளி குணமாகும்.

கொள்ளு பயிறு
கரைக்கவே முடியாத நெஞ்சு சளியை கரைக்க, கொள்ளு சூப் குடிப்பது சரியான தீர்வாக இருக்கும்.

தேன்
சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும் அப்படி உள்ளவர்கள், அடிக்கடி தேன் சாப்பிடலாம். தேனில் இருக்கும் விட்டமின் சி அடிக்கடி உண்டாகும் சளி தொல்லையிலிருந்து நம்மை காக்கும்

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்03 17

Related posts

நகம் கடித்தால் புற்று நோய் வரும்

nathan

தெரிஞ்சிக்கங்க… மிகுந்த வலியுடன் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா?..

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த உறுப்புகள் இல்லையென்றாலும் உங்களால் உயிர் வாழ முடியும்!

nathan

குழந்தை பெற்றெடுத்த ஆண்…பிரிட்டனில் பரபரப்பு!

nathan

தாம்பத்தியத்தின் போது பெண்கள் சங்கடப்படும் விஷயங்கள்

nathan

குடல் புண்ணை தடுப்பது எப்படி?

nathan

தகவல் அறுவை சிகிச்சையின் வலி அதிகமாக? அறுவை சிகிச்சையின் வலி இந்தளவுக்குத் தாங்கமுடியாததா?

nathan

உங்களுக்கு இப்படிப்பட்ட வயிறு வீக்கம் உள்ளாத? அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா கிட்னியை சுத்தம் செய்யும் 9 மூலிகைகள்…

nathan