29.4 C
Chennai
Saturday, Oct 5, 2024
p85
தலைமுடி சிகிச்சை

கூந்தல் வளர்ச்சிக்கான வீட்டு சிகிச்சை

அழகுக்கலை ஆலோசகர் ராஜம் முரளி

சின்ன வெங்காயம் 1, பூண்டு 4 பற்கள், அதிமதுரம் ஒரு சிறிய துண்டு மூன்றையும் மூழ்கும் அளவு கொதிக்கும் தண்ணீரில் அல்லது பாலில் சிறிது நேரம் ஊற வைத்து அம்மியில் நைசாக அரைக்கவும். அதை முடி உதிர்ந்த பகுதிகளில் தடவி, 1 மணி நேரம் ஊறி, வெறும் தண்ணீரில் அலசவும்.

செம்பருத்திப் பூக்களின் மகரந்தப் பகுதியை நிறைய சேர்த்துக் கொள்ளவும். அதை அப்படியே முடி உதிர்வுள்ள பகுதிகளில் அவ்வப்போது தேய்த்துக் கொண்டே இருக்கலாம். முடி இல்லாத பகுதியில் எப்போதும் இந்தத் தூள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். தடவிய பிறகு தலையை அலசத் தேவையில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை செய்யலாம்.

2 டீஸ்பூன் கசகசா, 2 டீஸ்பூன் மிளகு இரண்டையும் சிறிது பால் விட்டு நைசாக அரைக்கவும். அதை லேசாக சூடாக்கி, முடி உதிர்ந்த இடங்களில் தடவி, 1 மணி நேரம் ஊறிக் குளிக்கவும்.1 டீஸ்பூன் செம்பருத்தி தூள், 1 டீஸ்பூன் நெல்லிக்காய் தூள், 1 டீஸ்பூன் கறிவேப்பிலைத் தூள் மூன்றையும் பேஸ்ட் போலக் குழைத்து முடி உதிர்ந்த இடங்களில் தடவி, ஊறிக் குளிக்கலாம். இந்த மூன்றையும் முழுதாக வாங்கி, அரைப்பது சிறந்தது. இந்தக் கலவை முடிக்கு ஊட்டம் அளித்து, வேர்ப்பகுதிகளைத் தூண்டி, வளரச் செய்யும்.

மேலே கூறிய சிகிச்சைகளைச் செய்யும் போது ஷாம்புவை தவிர்க்கவும். வெந்தயம் மற்றும் பாசிப் பருப்பு தலா 100 கிராம், வெட்டிவேர் 50 கிராம் மூன்றையும் மெஷினில் அரைத்து அதை தலையை அலசப் பயன்படுத்தலாம். ஷாம்பு உபயோகித்ததால் மண்டைப்பகுதியில் சேர்ந்திருக்கிற ரசாயனச் சேர்க்கையை இது நீக்கும்.
p85

Related posts

இதை செய்யுங்கோ..!! தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டியது அவசியமா.?

nathan

பேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா வீட்டிலேயே தயாரிக்கலாம் “நேச்சுரல் ஹேர் டை”

nathan

முடி உதிர்வை தடுத்து உங்கள் தலைமுடியை வலுப்படுத்த வேண்டுமா? இதோ உடனடி தீர்வுகள்!!

nathan

நரை முடியைப் போக்க உதவும் ஹேர் பேக்குகள்!!

nathan

எண்ணெய்ப் பசையான கூந்தல்

nathan

‘இந்த’ இரண்டு டீயில் உங்க தலைமுடியை அலசுனீங்கனா…நீளமா வளருமாம் தெரியுமா?

nathan

வெள்ளை முடி அதிகமா இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க..!

nathan

ஷாம்புவுடன் உப்பு சேர்த்து குளித்தால், மிகப்பெரிய தலைமுடி பிரச்சனை நீங்கும் என தெரியுமா?

nathan