33241 1605096429
ஆரோக்கிய உணவு

கருத்தரிப்பதில் பிரச்சனைக் கொண்டவரா?உங்களுக்குதான் இந்த விஷயம்

நீங்கள் டீ அதிகம் குடிப்பவராக இருந்தால், நீங்கள் எடுக்கும் காப்ஃபைன் அளவைக் குறைக்க விரும்பினால், டீக்கு சிறந்த மாற்று பானங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். எடை இழப்பு முதல் பல நோய்களின் அபாயத்தைக் குறைப்பது வரை பல ஆரோக்கிய நன்மைகளைத் தன்னுள் கொண்ட பல டீ-க்கள் உள்ளன. அதில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தத் தேவையான அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த டீக்கள் தான் மூளிகை டீக்கள். இந்த வகையான டீக்கள் கருவளத்தை அதிகரித்து, விரைவில் கருத்தரிக்க உதவி புரியும்.

தற்போது கருத்தரிக்க முயற்சிக்கும் பல தம்பதிகள் சந்திக்கும முக்கிய கவலையாக கருவுறாமை உள்ளது. மன அழுத்தம் நிறைந்த ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை இப்பிரச்சனைக்கு முக்கிய காரணியாக விளங்குகின்றன. ஆனால் கருவுறுதல் சிகிச்சைக்காக எடுத்தவுடனேயே மருத்துவமனைக்கு செல்வதற்கு முன், ஒருசில இயற்கை வழிகளை முயற்சி செய்யுங்கள். அதில் வேகமாக கருத்தரிக்க உதவும் சில வகையான டீக்களை உங்கள் அன்றாட டயட்டில் சேர்த்து வாருங்கள். இந்த டீக்கள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு, குறைவான கலோரிகளையும் கொண்டவை. இப்போது அந்த டீக்களின் பட்டியலைக் காண்போம்.

சீமைச்சாமந்தி டீ

சீமைச்சாமந்தி டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆகவே கருவுறுதலில் பிரச்சனையை சந்திக்கும் தம்பதிகள் தங்களின் அன்றாட உணவில் சீமைச்சாமந்தி டீயைக் குடித்து வந்தால், ஒரு நல்ல பலனைக் காணலாம்.

புதினா டீ

புதினா டீ புத்துணர்ச்சி அளிக்கக்கூடியது மட்டுமல்ல, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் தன்னுள் கொண்டது. புதினா டீயை திருமணமாகி கருத்தரிக்க முயற்சிக்கும் தம்பதிகள் குடித்து வந்தால், அது கருவளத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, விரைவில் கருத்தரிக்க உதவி புரியும்.

க்ரீன் டீ

ஆரோக்கியமான பானங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருக்கும் ஒரு டீ தான் க்ரீன் டீ. உடல் எடையைக் குறைக்க நினைப்போர் பலரும் குடிக்கும் டீயும் இது தான். இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர சத்துக்கள், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். குறிப்பாக கருத்தரிக்க முடியாமல் கஷ்டப்படும் தம்பதிகள் க்ரீன் டீயைக் குடித்து வர, கருவுறாமை பிரச்சனை தடுக்கப்படும்.

ராஸ்ப்பெர்ரி இலை டீ

ராஸ்ப்பெர்ரி இலை டீயில் சக்தி வாய்ந்த பைட்டோ-புரோஜெஸ்டிரோன் பண்புகள் உள்ளன. இது உடலில் புரோஜெஸ்டிரோன் அளவை அதிகரிக்கக்கூடியவை. இந்த புரோஜெஸ்டிரோன் கருவுறுதலை அதிகரிக்கும் அத்தியாவசிய ஹார்மோன் ஆகும்.

ரெட் க்ளோவர் டீ

பண்டைய காலங்களில் இருந்து கருவுறுதலை அதிகரிக்கப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு டீ தான் ரெட் க்ளோவர் டீ. இதில் ஐசோஃப்ளேவோன்கள் அல்லது பைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் என்னும் இயற்கையான தாவர ஈஸ்ட்ரோஜென் உள்ளது.

Related posts

இத படிங்க கருவில் உள்ள குழந்தையின் முளை வளர்ச்சிக்கு பயன்படும் கிவி பழம்

nathan

தெரிஞ்சிக்கங்க…பீர்க்கங்காயை சாப்பிடுவதால் என்ன மாதிரியான நோய்கள் குணமாகிறது தெரியுமா?

nathan

பன்னீர் செட்டிநாடு

nathan

சூப்பர் டிப்ஸ்! இடுப்பு எலும்பு வலுப்பெற உளுந்துக் களி

nathan

கொய்யாவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

சூப்பர் டிப்ஸ்! பாதாமை ஊறவைத்து சாப்பிடலாமா.?!

nathan

சுவையான சத்தான கம்பு லஸ்ஸி

nathan

அறுகம்புல் சாறு தயாரிப்பது எப்படி? அதன் பலன்கள் என்ன?

nathan

உங்களுக்கு அந்த பிரச்சினையால் அவதியா? அப்படின்னா இத நாக்குக்கு அடில வைங்க.

nathan