35.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
vacsing
சரும பராமரிப்பு

உடலில் உள்ள முடிகளை அகற்றி வழுவழுப்பாக மாற்றி சருமத்தை அழகாக்கிக் கொள்ள!…

உடலில் உள்ள முடிகளை அகற்றி வழுவழுப்பாக மாற்றி சருமத்தை அழகாக்கிக் கொள்வதை தற்காலத்து இளம் பெண்கள் விரும்புகின்றனர்.

வீட்டிலேயே வேக்சிங் செய்வது எப்படி?

பெண்கள் தங்கள் மேனியில் வளரும் முடிகளை நீக்க சேவிங், வேக்சிங் அல்லது த்ரெட்டிங் செய்வது இப்படி எதுவாக இருந்தாலும் அதன் விளைவு என்னவென்று தெரிந்து கொள்வது நல்லது.

தொடர்ந்து ஹேர் ரிமூவல் செய்வதால் சருமம் பாதிக்கப்படும், அப்படியே விட்டுவிட்டு எப்போதாவது எடுத்தால் முடி வளர்ந்து அதுவே உங்களுக்கு தலைவலியாகிவிடும்.

முக்கியமான நிகழ்ச்சி மற்றும் மீட்டிங் போது விரைவில் ஹேர் ரிமூவல் செய்து கொள்ளுங்கள்.

vacsing

உடலில் உள்ள முடிகளை அகற்றி வழுவழுப்பாக மாற்றி சருமத்தை அழகாக்கிக் கொள்வதை தற்காலத்து இளம் பெண்கள் விரும்புகின்றனர்.

இதற்காக பார்லர்களுக்குச் சென்று வேக்சிங் செய்து கொள்வதோ அல்லது வீட்டில் இருந்தபடியே கடைகளில் கெமிக்கல் கலந்து விற்கப்படும் கிரீம்களையோ பயன்படுத்துகின்றனர்.

வேக்சிங், உடலில் தேவையற்ற முடிகளை தற்காலிகமாக நீக்கும் பிரபலமான ஒரு முறையாகும்.

இது பெரும்பாலானோர் நினைப்பது போல் நவீன முறை அல்ல. எகிப்திய பெண்கள் தங்கள் உடலில் சிறு முடிகளை நீக்க பயன்படுத்திய பண்டைய முறையே ஆகும்.

ஷேவிங் செய்வது போல் அல்லாமல், வேக்சிங் முறையில் முடி மீண்டும் வளர மூன்று முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும். இது மற்ற முடிகளை நீக்கும் முறைகளில் சாத்தியம் இல்லை என்பதால் பெண்கள் இந்த முறையை அதிகம் விரும்புகின்றனர்.

வெதுவெதுப்பான அல்லது சூடான மெழுகு பயன்படுத்தி வேக்சிங் செய்வது பொதுவான முறையாகும். இந்த முறையில் பயன்படுத்தப்படும் மெழுகில் முடிகளை
இலகுவாக நீக்கக்கூடிய சர்க்கரை சேர்ந்து இருக்கும்.

இது குளிர் வேக்சிங்கை விட மிகவும் ஆற்றல் வாய்ந்த முறையாகும். பெரும்பாலான அழகு நிலையங்களில் செய்யப்படும் வேக்சிங்கும் இது தான்.

குளிர் வேக்சிங்கில் பயன்படுத்தப்படும் மெழுகு எல்லா மருந்து கடைகளிலும் எளிதில் கிடைக்கக்கூடியது. இந்த முறை பெரும்பாலான பெண்களால் வீட்டிலேயே செய்யப்படுவது.

சருமத்தில் வளரும் தேவையற்ற முடியின் மீது, முடி வளரும் திசையை நோக்கி மெழுகை ஒரு மெல்லிய அடுக்காக பரப்ப வேண்டும்.

பின்பு ஒரு துணி அல்லது காகித துண்டு கொண்டு மெழுகு மேல் அழுத்தி, முடி வளரும் திசைக்கு எதிரான திசையில் மிக விரைவாக நீக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் மெழுகு முடியை பற்றி இழுத்து, முடியை நீக்கி மென்மையான சருமத்தைப் பெற வைக்கிறது.

Related posts

ஸ்பா நீராவிக் குளியல்

nathan

உடல் அழகை பாதுகாப்பதில் தக்காளியின் பங்கு!!!

nathan

உங்க சருமம் புதுசா ஜொலிக்கனுமா? இந்த ஒரு ரெசிபி ட்ரை பண்ணுங்க!!

nathan

முகம் பொலிவு பெற…

nathan

சருமத்தின் மாசுக்களை அகற்றும் கரித்தூள் !!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நீங்க குளிக்கும் நீரில் சிறிது பால் கலந்து குளிப்பதால் உங்கள் உடலில் நடக்கும் அதிசயங்கள் என்ன தெரியுமா?

nathan

தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சியா?

nathan

ஆயுள் முழுக்க இளமையோடு ஜொலிக்க உதவும் அமிர்தப்பொடி… வீட்டில் எப்படி தயாரிப்பது..?இத படிங்க!

nathan

கழுத்தின் இளமை ரகசியம்,

nathan