28.6 C
Chennai
Friday, Jul 18, 2025
625.500.560.350.160.300.053.80 7

அடேங்கப்பா! இதுவரை யாரும் பார்த்திராத ஸ்ரீதேவியின் குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட கணவர்…

மறைந்த நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது பாலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்கியவர். அப்போதே லேடி சூப்பர் ஸ்டார் என இந்திய சினிமா ரசிகர்களால் அழைக்கப்பட்ட ஸ்ரீதேவி சினிமாவில் பல சாதனையை புரிந்துள்ளார்.

இவரது கணவர் போனி கபூர் பிரபல தயாரிப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. ஜான்வி கபூர் , குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஜான்வி பாலிவுட் சினிமாவின் இளம் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

குஷி வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கும் நிலையில், இவரது தந்தை போனி கபூர் அஜித்தின் வலிமை படத்தினை இயக்கு வருகின்றார். நட்சத்திர குடும்பம் என்பதால் ஒரு சிறிய விஷயம் என்றால் கூட ரசிகர்களிடம் பரபரப்பாகவே பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் அனைவரும் தமிழ்நாட்டு ஸ்டைலில் உடை அணிந்துள்ளது தான் ஹைலைட். ஸ்ரீ தேவி தன் மகள் ஜான்விக்கு எப்போதும் பாவாடை தாவணி அணியச்சொல்லி அழகு பார்ப்பாராம்.

அதை அப்போது உதாசீனப்படுத்திய ஜான்வி தற்போது அம்மாவின் மறைவிற்கு பிறகு அவரது ஆசையை தன் ஆசையாக மாற்றிக் கொண்டு விசேஷ விழாக்களுக்கு பாவாடை தாவணி அணிந்து செல்கின்றாராம்.